சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம்

குறித்த சந்திப்பு 2018.03.13 இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுவில் உயர்தானிகர்Heinz Walker-Nederkoorn சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரி வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.


ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
இன்று தம்மை சந்தித்தவர்களிடம் பல விடயங்களை தாம் குறிப்பிட்டதாக தெரிவித்தனர். ஜெனிவாவில் தமது விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தமக்கு சுவிஸ் அரசாங்கம் விசா வழங்காமை தொடர்பில் தாம் பேசியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஜெனிவாவில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்க முடியாத போதிலும்  தமது அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் கடும் அழுத்த்தினை தெரிவிக்கும் என அவர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவித்தனர்.

No comments:

Post a Comment